சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் காணப்படும் ஒரு பெண்மணி, தன் வீட்டில் உள்ள துடைப்பானை சிறிது மாற்றி, அதற்குள் தங்க நகைகளை எளிமையாகவும், எவரும் சந்தேகிக்காத வகையிலும் எப்படி மறைக்கலாம் என்பதை விளக்குகிறார்.

முதலில், அந்தப் பெண் துடைப்பானின் கீழ் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கூழையை வெட்டி, அதில் தன் நகைகளை வைத்து மறைத்து விட்டார். பிறகு அதை பழைய வடிவில் திரும்ப ஒட்டி வைத்தார். இந்த செயல் மிக எளிமையாக இருந்தாலும், அதில் உள்ள புத்திசாலித்தனமும் பாதுகாப்பும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

“>

 

வீடியோவில் அந்தப் பெண், “நீங்கள் வீட்டை விட்டு சில நாட்களுக்கு வெளியே செல்கிறீர்கள் என்றால், நகைகளை இந்த துடைப்பானில் வைத்து குளியலறையில் சும்மா வைக்குங்கள்.

திருடர்கள் வீட்டின் முக்கிய இடங்களைத் தேடுவார்கள், ஆனால் குளியலறையில் துடைப்பானை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்” எனவும் விளக்குகிறார். தற்போது இந்த யுக்தி, நகைகளை பாதுகாக்கும் ஒரு புதிய உத்தியாக மக்களிடம் பரவி வருகிறது.