பிரபல தமிழ் நடிகை லட்சுமி மேனன் தற்போது பரபரப்பான ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள மதுபான விடுதியில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஒரு ஐடி துறையைச் சேர்ந்த ஊழியருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அந்த ஐடி ஊழியர் காரில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய சந்தேகமாகக் கருதப்படும் நடிகை லட்சுமி மேனனை விசாரணைக்கு வருமாறு காவல்துறை அழைத்திருந்தது. எனினும், அவர் இதுவரை விசாரணைக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தப்பிச் சென்றதாகக் கருதப்படும் லட்சுமி மேனனை விரைவில் கைது செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இந்த வழக்கு கேரளாவில் மிகப்பெரிய விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.