உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எச்டிஎப்சி வங்கி குறைந்த விலையில் வீட்டு கடன்களை வழங்கி வரும் நிலையில் தற்போது வட்டி விகிதம் வெறும் 8.45 சதவீதம் தொடங்கி ஒன்பது புள்ளி 85 சதவீதம் வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Induslndவங்கியின் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 9.7 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

இந்தியன் வங்கியின் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதம் முதல் 9.9 சதவீதம் வரை மட்டுமே உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடன்களை வழங்கும் மற்றொரு கடன் வழங்கும் சிறந்த வங்கியாகும். இந்த வங்கியில் குறைந்தபட்சம் எட்டு புள்ளி ஆறு சதவீதம் முதல் 9.45 சதவீதம் வரை மட்டுமே வட்டி விகிதம் உள்ளது.. மேலும் இந்த வங்கியில் 50 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெற முடியும்.

மகாராஷ்டிரா வங்கியில் வீட்டுக் கடன்களை 8.6 சதவீதம் முதல் 10.3 சதவீதம் வரையான வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.