எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கியால் கொடுக்க முடிந்த குறைந்த பட்ச வட்டி (MCLR)ஐ எஸ்பிஐ வங்கி 5bps உயர்த்தியுள்ளது.

இதனால் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வட்டி இந்த மாதம் முதலே உயரும். இனிமேல் புதிதாக கடன் வாங்குவோருக்கு வட்டி விகிதம் அதிகமாக நிர்ணயிக்கப்படும். ஜூலை 15ஆம் தேதி(நேற்று) முதல் இந்த புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருவதாக எஸ்பிஐ அறிவித்த நிலையில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கான MCLR 8.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.