ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், குளிர்பான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான குளிர்பான பாட்டில்கள் சாலை எங்கும் சிதறிக்கிடந்தன. விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அந்த இடத்திற்கு ஓடிவந்த பொதுமக்கள் ஓட்டுநருக்கு உதவ முன்வருவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக்கிடந்த குளிர்பான பாட்டில்களை அள்ளுவதிலேயே குறியாக இருந்தனர்.
हाईवे पर पलटा कोल्ड ड्रिंक का ट्रक, लोगों ने 10 मिनट में सारा लूट डाला
नेल्लोर नेशनल हाईवे पर कोल्ड ड्रिंक से भरा ट्रक पलट गया, जिसके बाद लोग कोल्ड ड्रिंक लूटने के लिए टूट पड़े, सिर्फ 10 मिनट के अंदर ही लोगों ने पूरा स्टॉक खाली कर दिया. वीडियो वायरल.#Nellore #HighwayAccident… pic.twitter.com/9TAWpTqBFL
— NBT Hindi News (@NavbharatTimes) March 19, 2026
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களையும், சமூக வலைதளவாசிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்த அடுத்த பத்தே நிமிடங்களில், கையில் கிடைத்த பைகள் மற்றும் பாத்திரங்களில் குளிர்பான பாட்டில்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு பாட்டில் குளிர்பானத்திற்காக மனிதாபிமானத்தை மறந்து இவ்வளவு தரம் தாழ்ந்து இறங்குவதா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உதவி செய்ய வேண்டிய இடத்தில் இப்படி ஒரு பகல் கொள்ளையை அரங்கேற்றியது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
