இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினரை ‘அதிதி தேவோ பவ’ எனத் தெய்வமாக மதிக்க வேண்டிய இடத்தில், ஒரு சிலர் செய்யும் இத்தகைய இழிவானச் செயல்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் மெஹந்தி (Henna) இட்டுக் கொள்வதற்காக ஒரு கலைஞரை அணுகியுள்ளார். ஆரம்பத்தில் வெறும் 100 ரூபாய் மட்டுமே கட்டணம் என்று கூறி வேலையைத் தொடங்கிய அந்த நபர், மெஹந்தி வேலை முடிந்தவுடன் திடீரென தனது பேச்சை மாற்றி 2000 ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். ஒரு சாதாரண மெஹந்திக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டு அந்தப் பெண்ணைச் சங்கடப்படுத்தியுள்ளார்.

​இந்தச் சம்பவம் குறித்தக் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அந்தப் பெண்ணை மட்டுமல்லாமல், அங்கு வரும் மற்ற சுற்றுலாப் பயணிகளிடமும் இதே போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. “நமது விருந்தினர்களை இப்படித்தான் நடத்துவதா?” என நெட்டிசன்கள் அந்த நபரை வறுத்து எடுத்து வருகின்றனர். ஒரு சிலரின் பேராசையினால் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்மல் பண்பு உலக அளவில் கேலிக்குள்ளாக்கப்படுவது வேதனையளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.