மத்தியப் பிரதேசத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சாமியாரை ஒரு கும்பல் பிடித்துத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சாமியார்கள் தங்களை பிராமணர்கள் என்று கூறியதை அடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களிடம் மகாபாரதக் கதாபாத்திரங்களின் பெயர்கள், ராமாயணச் செய்யுள்கள் மற்றும் இந்து கடவுள்களின் மனைவியர் பெயர்களைக் கேட்டுள்ளனர்.
<a href="http://

“>
அதற்குச் சரியான பதில் தெரியாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சாமியார்களைக் கடுமையாகத் தாக்கினர். மேலும், அந்த சாமியார்களின் பைகளைச் சோதனையிட்டபோது, அவற்றுள் இருந்த ஆவணங்கள் அனைத்தும் உருது மொழியில் இருந்ததால் இளைஞர்கள் இன்னும் கோபமடைந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

“இவர்கள் போலி வேடமிட்டு இந்து மதத்தை அவமதிக்கிறார்கள், நம் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டிய அந்த இளைஞர்கள், இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

போலிச் சாமியார்கள் என்று கூறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமியார்களிடம் இருந்த உருது ஆவணங்கள் மற்றும் அவர்கள் பின்னணி குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.