இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும் சமூக வலைதளங்களும் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஒரு ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கிருந்த தண்டவாளத்தில் கூட்டமாக நின்றிருந்த பசுக்களைக் கண்டு அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
<a href="http://
THE MAN SAVED THE COWS AND BULLS FROM BEING HIT BY THE TRAIN. pic.twitter.com/YVXw0be6Hy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 2, 2026
“>
ஆனால், அந்த வீடியோவை எடுத்த வாலிபர் மட்டும் சும்மா இருக்காமல், உடனடியாக தண்டவாளத்திற்குச் சென்று அங்கிருந்த பசுக்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி, அவை ரயிலில் அடிபடாமல் லாவகமாகக் காப்பாற்றினார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ ‘கர் கே கலேஷ்’ (@gharkekalesh) என்ற பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
“உண்மையான கோ-ரட்சகர் இவர்தான்” என்று ஒரு தரப்பினர் அந்த இளைஞரின் துணிச்சலைப் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் “இதை வீடியோ எடுத்து விளம்பரம் செய்ய வேண்டுமா?” என்ற ரீதியில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
எது எப்படியோ, ஆபத்தான நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு வாயில்லா ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞரின் செயல் பலரது இதயங்களை வென்றுள்ளது.
