சமூக வலைதளங்களில் நாம் தினமும் பலவிதமான வீடியோக்களைப் பார்க்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும்.

ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.ஒரு நபர் உயிருடன் இருக்கும் ஒரு பாம்பை தனது வாயால் கவ்விப் பிடிக்க முயற்சி செய்கிறார்.
<a href="http://

“>
பாம்பு அவரைத் தாக்க முயன்றாலும், எதற்கும் அஞ்சாத அந்த நபர் லாவகமாக பாம்பை வாயால் கவ்விப் பிடிக்கிறார். இந்த விபரீதமான செயலைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “பாம்புடன் இப்படியொரு விளையாட்டா?” என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலர் இதை வேடிக்கையாகப் பார்த்தாலும், பெரும்பாலானோர் இது போன்ற ஆபத்தான செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர்.

“இந்த நபர் உண்மையிலேயே நெருப்பு தான்” என சிலர் கமெண்ட் செய்தாலும், இதுபோன்ற உயிரைப் பணயம் வைக்கும் ஸ்டண்ட்டுகளை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.