துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா உதயநிதியின் சமூக வலைதளப் பதிவிற்கு அளித்துள்ள கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிருத்திகா உதயநிதி சமீபத்தில் எக்ஸ்  தளத்தில் ‘பிரபலம்’ மற்றும் ‘சுய அடையாளம்’ குறித்து ஒரு தத்துவார்த்தமான பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், “மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து உங்கள் சுயத்தை நீங்கள் இழக்கத் தொடங்கினால், நீங்கள் பெரிய பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இந்நிலையில், கிருத்திகா உதயநிதி பைக் ஓட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நீங்கள் ஒரு பெரிய செலிபிரிட்டியாக இருக்கலாம்! ஆனால் பார்த்து வண்டி ஓட்டணும்” என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.

மேலும் மனைவியின் சீரியஸான பதிவிற்கு உதயநிதி அளித்துள்ள இந்த ஜாலியான கமெண்ட், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தம்பதியினரின் இந்த கலகலப்பான உரையாடலை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.