இந்தியாவில் வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட் போன்கள் குறைந்த அளவு உள்ள நிலையில் அதில் ஒன்றாக Vivo V25 5G காணப்படுகின்றது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லும் வசதி உள்ளது. இதில் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அம்சம் மட்டுமல்லாமல் பல சிறப்பம்சங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட் போனில் வாடிக்கையாளர்களுக்கு 6.44 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கிறது. நிறத்தை மாற்றும் fluorite Ag Glass தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

பின்புறத்தில் பேனலில் சூரிய ஒளி அல்லது UV கதிர்கள் வெளிப்படும்போது நிறத்தை மாற்ற இது அனுமதிக்கும். மேலும் அதிநவீன செல்ஃபி கேமராக்கள் மற்றும் ஐம்பது எம்பி மேம்பட்ட ஆட்டோ போக்கஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. 5g இயங்கு தளத்தின் ஆற்றலை கொண்டுள்ள இதில் எட்டு ஜிபி வரை கூடுதல் ரேம் வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட் போன் 32,999 ரூபாய்க்கு கிடைக்கின்றது. 15 சதவீதம் தள்ளுபடியுடன் 25,280 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். அதே சமயம் எக்சேஞ்ச் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.