இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய பயனர்களுக்கு உதவும் வகையில் அடிக்கடி புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் 19 ரூபாய் மற்றும் 29 ரூபாய் விலையிலான பூஸ்டர் பேக் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற முடியும். அதன்படி இந்த 19 மற்றும் 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்கள் பயனர்களுக்கு 1.5 ஜிபி முதல் 2.5 ஜிபி வரையிலான டேட்டாவை வழங்குகின்றது. இந்த திட்டம் உங்களுடைய தற்போதைய ரீசார்ஜ் திட்டத்துடன் ஒத்துப் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜியோவில் 25 ரூபாய் விலையுள்ள போஸ்டர் திட்டமும் உள்ள நிலையில் தற்போது இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.