இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுவாகவே ஸ்மார்ட்போன்களின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும். இந்த வெப்ப நிலைக்கு மேல் உங்களின் செல்போன் இருந்தால் அதனை உடனடியாக நீங்கள் சரி செய்வது நல்லது. நாம் செய்யும் சிறிய தவறுகளால் தான் செல்போன்கள் சூடாகின்றன. நீங்கள் ஐபோனை வைத்திருந்தால் அல்லது ஏதாவது ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தாலும் அதனை சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் செல்போன் சூடாக அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் காரணம் சூடான மற்றும் வெயில் படும் இடங்களில் செல்போனை நீண்ட நேரம் வைத்திருப்பது தான்.

இவ்வாறு வைத்தால் செல்போன் பேட்டரிகளின் ஆயுள் காலம் வெகுவாக குறைந்து விடும். ஸ்மார்ட்போன்களை அடிக்கடி அப்டேட் செய்து ராம் செயல்பாட்டில் அதிக இடங்களை வைக்கக்கூடிய செயலை அல்லது கேம்களை நீண்ட நேரம் உபயோகத்தில் வைப்பது. ஹை குவாலிட்டி வீடியோக்களை நீண்ட நேரம் பார்ப்பது மற்றும் ஸ்மார்ட் ஃபோனை மால் வேர் அல்லது வைரஸ்கள் தாக்கியிருந்தாலும் ஃபோனின் செயல்பாடு திறன் பாதித்து சூடாக கூடும். எனவே சூடான நாட்களில் செல்போன்களை அதிக நேரம் காரில் வைத்து விட்டு செல்லக்கூடாது..சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களில் ஸ்மார்ட் ஃபோனை வைக்க கூடாது.

அதிகமாக பேட்டரி பவர் மற்றும் ராம் செயல்பாட்டை எடுக்கும் செயலிகள் மற்றும் கேம்களை விளையாடுவதை தவிர்க்கலாம். செல்போன் சூடாவதை உணரும்போது சிறிது நேரம் உங்கள் ஃபோனின் பேக் கவர் ஐ அகற்றி வைப்பது நல்லது. பயன்படுத்தாமல் பேக்ரவுண்டில் செயல்பாட்டில் இருக்கும் செயல்களை நீக்குவது, பேட்டரி சேவ் மோட் ஆக்டிவேட் செய்வது நல்லது. இது போன்ற சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் உங்களின் செல்போன் சூடாகாமல் இருக்கும்.