சமூக வலைதளங்களில் தினமும் பல வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு ராட்சத பாம்பு அருவி போன்ற நீரூற்றின் அடியில் நின்று ஜாலியாக குளிக்கும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவரை ஒட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப் பாம்பின் மீது ஒருவர் தண்ணீரை ஊற்ற, அது எந்த எதிர்ப்பும் காட்டாமல் மிகவும் ரசித்து குளிக்கும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பாம்புகளைப் பார்த்தாலே பயந்து ஓடும் மக்களுக்கு மத்தியில், இந்த வீடியோ முற்றிலும் மாறுபட்டதாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.
‘mirzoo_mike’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். விலங்குகளின் சுவாரசியமான செயல்களைக் கண்டு வியக்கும் நெட்டிசன்கள், “பாம்பு குளிப்பதை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம்” என்றும், “இது மிகவும் நட்பாகப் பழகுகிறது” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஆபத்தான விலங்காகக் கருதப்படும் பாம்பு இவ்வளவு அமைதியாக குளிக்கும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.
