பள்ளிக்கூடம் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்கப் பெற்றோர்கள் பல வழிகளைக் கையாளுவார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு தாய் தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பப் பின்பற்றிய வினோதமான முறை அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

தினமும் பள்ளிக்குச் செல்லாமல் போக்குக் காட்டி வந்த தனது மகனை வழிக்குக் கொண்டு வர, அந்தத் தாய் ஒரு போலீஸ்காரரின் உதவியை நாடியுள்ளார். வீடியோவில் அந்தச் சிறுவன் கைகளைக் கூப்பி மன்னிப்புக் கேட்டபடி தரையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

அந்தப் போலீஸ்காரர் வேடிக்கையாகச் சற்று மிரட்டுவது போல் பேசியதும், பயந்துபோன அந்தச் சிறுவன், “இனிமேல் தினமும் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வேன், வீட்டில் மொபைல் போன் பார்க்க மாட்டேன்” என்று வாக்குறுதி அளிக்கிறான்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் இந்த வீடியோவிற்குச் சிரிப்புடன் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “குழந்தைகளைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு தாய்க்கும் இது போன்ற ஒரு உதவி தேவைப்படுகிறது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Just Indian Things (@just.indian.things)

“>

அதே சமயம், குழந்தைகளை இப்படிப் போலீஸைக் காட்டி மிரட்டுவது சரியல்ல என்றும் சிலர் கருத்துப் பகிர்ந்துள்ளனர். எது எப்படியோ, அந்தச் சிறுவனின் மிரட்சியும் அவன் மன்னிப்புக் கேட்ட விதமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.