இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், நடிகர் ரன்வீர் சிங் மிகுந்த உற்சாகத்துடனும் மரியாதையுடனும் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் வரும் வழியில் அனைவருக்கும் கைகுலுக்கி, புன்னகையுடன் மகிழ்ச்சியைப் பகிர்கிறார். வழியில் ஒரு காவலரைப் பார்த்தவுடன், அவருக்கு மரியாதை நிமித்தமாக சல்யூட் செய்கிறார். பின்னர், மேடையை அடைந்த அவர், அங்கு தொகுப்பாளினியாக இருந்த டிடி-யை சந்திக்கிறார். அவருக்கு மிகவும் பவ்யமாக முட்டி போட்டு ஒரு ரோஜா பூவை வழங்குகிறார், இது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

ரோஜா பூவை வாங்கிய டிடி, வேடிக்கையாக, “இத்தனை வருடமாக நாயா, பேயா கத்துற எந்த தமிழ் ஹீரோவும் இதுவரை இப்படி பண்ணதில்லை என்று கூறி, ரன்வீர் சிங்குக்கு நன்றி தெரிவிக்கிறார். இந்த இனிமையான தருணம் காணொளியாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரன்வீரின் அன்பான மற்றும் மரியாதையான செயல் பலரது பாராட்டைப் பெற்று, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.