சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பூனையும் எலியும் நிஜமாகவே ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கதையை நினைவூட்டுகின்றன. ஒரு வீட்டில் கயிற்றால் கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த பூனை, திடீரென எழுந்து, வீட்டுக்குள் உணவு தேடி அலைந்த எலியைப் பார்த்தவுடன் பாய்ந்து பிடித்து விடுகிறது. எலி தப்பிக்க முயன்றாலும், பூனையின் வேகத்துக்கு முன்னால் தோல்வியடைகிறது. இந்த 16 வினாடி வீடியோ, சமூக வலைதளமான எக்ஸ்-ல் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்டு, 9 லட்சத்துக்கும் மேல் பார்வைகளைப் பெற்று, 9,000-க்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்துள்ளனர்.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) October 11, 2025
இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இது ஒரு வனவிலங்கு ஆவணப்படம் போல இருக்கு” என்றும், “எச்சரிக்கையாக இல்லைன்னா இப்படித்தான் ஆகும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் “டாம் அண்ட் ஜெர்ரியின் நிஜ வாழ்க்கை பதிப்பு” என்று நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளனர். எலியின் ஒரு சிறு தவறு அதன் உயிரையே பறித்து விட்டதாகவும், பூனையின் வேகத்துக்கு முன்னால் எலிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். இந்த வீடியோ, எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் பேசப்படுகிறது.
