இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் ஸ்கேன் போன்ற ஒரு பொருளிலிருந்து பாம்பை வெளியே எடுக்கிறார். பாம்பை கையில் பிடித்து கேமராவிற்கு காட்டிய அவர், பின்னர் அதன் தலையை கடித்து துப்புகிறார். இந்தக் காட்சி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. அவரது தைரியமும் இந்த அசாதாரண செயலும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர், அந்த நபர் பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்புவதை காணொளி காட்டுகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், “இவர் ஆபத்தில் இல்லை, இவர்தான் ஆபத்து” என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தக் காணொளி வைரலாக பரவி, பலரும் அவரது செயலைப் பற்றி பேசி, வியந்து, அதேசமயம் பயத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நபரின் இந்த செயல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.