“வெறும் 40 ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல், தான் ஒரு பெரிய ஐபிஎஸ் அதிகாரி என்று டீக்கடைக்காரரையும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் மிரட்டிய போலி அதிகாரி கைகுலுக்கி மாட்டிக்கொண்ட கொடூர காமெடிச் சம்பவம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.
லக்னோவில் மிதிலேஷ் சுக்லா என்ற நபர் தேநீர்க் கடையில் வெண்ணெய் வாங்கிவிட்டு, கடைக்காரர் பணத்தைக் கேட்டதும் தான் நொய்டாவில் பணிபுரியும் ஐபிஎஸ்அதிகாரி என போலி அடையாளத்தைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகமடைந்த கடைக்காரர் போலீசுக்குத் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமே “எனக்கு ஏன் இன்னும் சல்யூட் அடிக்கவில்லை?” என்று மிதிலேஷ் பந்தா காட்டியுள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் ஐடி கார்டைக் கேட்க, அவரிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சாதாரண ஊழியர் என்பதும், அதிகாரிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதும் அம்பலமானது.
Lucknow: Man impersonating Noida IPS officer steals ₹40 bun packet from a tea stall, refuses to pay. Video shows him arguing with police, demanding ‘full izzat’
Fake cop entitlement at its finest😂
pic.twitter.com/W2dIP6F3B7— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 15, 2026
“>
காவல் நிலையப் பொறுப்பாளர் அளித்தபுகாரின் பேரில் போலி அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசித்திரத் திருட்டு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
