மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவும் போரினால் ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு பற்றாக்குறை, சூரத் நகரின் ஜவுளித் தொழிலை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி 30 சதவீதம் வரை சரிந்துள்ளதோடு, சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் மந்தமாக உள்ளதால், வருமானம் இல்லாமல் வாடும் தொழிலாளர்கள் வேறு வழியின்றி சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு இளைஞரின் உருக்கமான காணொளி, இந்த வேலை இழப்பின் வலியையும் விரக்தியையும் வெளிப்படுத்துகிறது. “நான் இனித் திரும்பி வரமாட்டேன் நண்பா” என்று கண்ணீருடன் அந்த இளைஞன் ரயிலைப் பிடிக்க ஓடும் காட்சி, வேலையில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் கையறு நிலையை எடுத்துக்கூறுகிறது.

“>

 

இந்த எரிவாயு நெருக்கடி ஒரு தொழில் நகரத்தின் பொருளாதாரத்தை முடக்கியது மட்டுமின்றி, சாமானிய மனிதர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.