இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம். இது மிக நெடிய போராட்டம். நெடும் பயணத்தை தாண்டி படம் திரைக்கு வர உள்ளது. படம் அதீத நாட்கள் எடுத்துக் கொண்டது. நான் வரை ஆண்டு கால உலகத்தில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, படம் தொடங்கும்போது கட்சியில் இருந்தேன். படம் முடியும்போது அமைச்சராக உள்ளேன். திமுக இளைஞரணி செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் என நான்கரை ஆண்டுகள் உழைத்த தான் படிப்படியாக நான் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக உள்ளேன் என கூறினார்.