சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று மாலை ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில் தற்போது விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15676 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,712 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
