தமிழகத்தில் கறிக்கோழி மற்றும் ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்துள்ள சூழலில், விவசாய நிலங்களைச் சூறையாடும் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக அவர் பேசியதாவது, மத்திய அரசின் வனவிலங்கு பாதுகாப்புப் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில அரசும் காட்டுப்பன்றியை வனவிலங்குப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நீக்கப்படாவிட்டால், விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கான உத்தரவையாவது அரசு பிறப்பிக்க வேண்டும். சந்தையில் தற்போது சிக்கன் விலை கிலோ ரூ. 250 ஆகவும், மட்டன் விலை கிலோ ரூ. 600 ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே, காட்டுப்பன்றிகளைச் சுட உத்தரவிட்டால் விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.