தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் எம்எல்ஏ கீர்த்தனா அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் பேசும் திறமை படைத்தவர். இவர் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என்று ஒரு பேட்டியில் பேசியது சர்ச்சையாக மாறியது. இதற்கு திமுகவும் தங்களுடைய ஐடி விங் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு கண்டனங்களை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் அமைச்சருக்கு ஏத்த நான் தற்போது தன்னுடைய பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, நானும் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. அறியாமல் செய்த ஒரு தவறை அரசியலாக வேண்டாம். மேலும் என்னுடைய பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தவெக அமைச்சர் செல்வி.கீர்த்தனா அவர்கள் ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் என்று பேசியுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியலில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை தவெகவினர் உணர வேண்டும். பதவியில் இருப்பவர்கள்… pic.twitter.com/CqyhyPmiL9
— DMK IT WING (@DMKITwing) May 13, 2026
