சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம், அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பத்தை வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் மீது இபிஎஸ் தரப்பு அதிரடி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதன் மற்றும் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா என கட்சியின் ‘ஹெவிவெயிட்’ புள்ளிகளாக இருந்த 9 பேரின் அமைப்புச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டிருப்பது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் பிடி நழுவுகிறதா அல்லது கட்சி உடையப்போகிறதா என்ற மிகப்பெரிய அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.
