தமிழ்நாட்டில் ஜென் ஸீ இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனை மையப்படுத்தி 2026-2027ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் என். மரிய வில்சன் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள், கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் லேப்டாப்கள் மற்றும் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, அரசு ஐடிஐ-க்களில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுளளது.
விளையாட்டுத் துறையை ஊக்கப்படுத்த 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் ரூ. 131 கோடி ஒதுக்கீடு மற்றும் மதுரையில் புதிய சட்டப்பள்ளி போன்ற பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
