தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநிலத்தின் கடன் நிலவரம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதமும் காரசார விவாதமும் நடைபெற்றது.

​சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதி அமைச்சர் நெ. மரிய வில்சன் திமுகவினரைப் பார்த்து, “தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனை வைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள்” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் முன்வைத்தார்.

​அமைச்சரின் இந்த குற்றச்சாட்டிற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு, “நீங்கள் ஆட்சிக்கு வந்த இந்த வெறும் 60 நாட்களில் ரூ.22 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல், ’50 ஆண்டுகள் ஆனாலும் கடன் குறையாது; கடன் வாங்காமல் அரசை நடத்த முடியாது’ என்று உங்கள் அரசின் நிதித்துறைச் செயலாளரே பட்ஜெட் தாக்கல் செய்த அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்” என்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி அமைச்சரை மடக்கி அடித்தார்.

​மாநிலத்தின் கடன் சுமையைக் சுட்டிக்காட்டித் தவெக நிதி அமைச்சரும், புதிய அரசின் கடன் வாங்கும் போக்கைக் சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏ கே.என்.நேருவும் சட்டமன்றத்தில் மாறி மாறி மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது.