பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு தலா 5 விஐபி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் விஐபி-க்கள் என்பதால் பொதுமக்களைப் போல வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாது என்றும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் தங்களை அவமதிப்பதாகவும் சட்டசபையில் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 விஐபி டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சபாநாயகர் அரசுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அதிரடி முடிவு எடுத்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு எம்பி, எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு தலா 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ-க்களின் கூடுதல் டிக்கெட் கோரிக்கையை அவர் நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் டிக்கெட்டுக்காக மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் இந்த விஐபி டிக்கெட் மோதல் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.