ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம், பணியில் இருந்த காவலர் ஒருவர் அநாகரீகமான முறையில் தனது தொலைபேசி எண்ணைக் கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனியாக இருப்பதைக் கவனித்த அந்த காவலர், அவரிடம் நலம் விசாரிப்பது போல நடித்து, ஒரு காகிதத்தில் தனது மொபைல் எண்ணை எழுதி அவரிடம் நீட்டியுள்ளார்.

இந்நிலையில் காவலரின் இந்த வரம்பு மீறிய செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து அந்தச் சம்பவத்தைப் படம்பிடிக்கத் தொடங்கினார். தான் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்த அந்த காவலர், அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடினார்.

“>

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வரும் அதே வேளையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தத் திரிக்கப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.