சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது. அலுவலகத்தில் தனது வேலையில் மும்முரமாக இருந்த ஒரு இளம் பெண்ணிடம், சக ஊழியர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப் பெண் கணினி முன் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அந்த நபர், அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார். இதனால் நிலைதடுமாறிய அந்தப் பெண், உடனடியாக அவரை எச்சரித்ததோடு, “கேமராவை உடைத்துவிடுவேன்” என்று ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

“>

இதனால் சக பணியாளர்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை இந்த வீடியோ வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்த வீடியோ பரவத் தொடங்கியதிலிருந்து இணையவாசிகள் மத்தியில் கடும் கோபத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது நிறுவனங்களின் கடமை என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் “பெண்கள் பணியிடங்களில் இத்தகைய அத்துமீறல்களைச் சந்திப்பது மிகவும் வேதனைக்குரியது, அந்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். வைரலாகி வரும் இந்தச் சம்பவம், அலுவலக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை முன்னெடுத்துள்ளது.