அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், சவுதி அரேபியா எனப் பரவி வரும் நிலையில், காயமடைந்த தனது நாட்டு மக்களைச் சந்தித்த அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முதன்முறையாக இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளார்.

“தற்போது நாடு போர்ச் சூழலில் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது” என்று உறுதியளித்துள்ள அவர், எதிரிகளுக்கு ஒரு அதிரடி எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

“யாரும் ஐக்கிய அரபு அமீரகத்தை அவ்வளவு எளிதான இலக்காக (Easy Target) நினைத்துவிட வேண்டாம்; நாங்கள் வேட்டையாடப்பட வேண்டிய இரை அல்ல” என்று அவர் ஆவேசமாகப் பேசியிருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஈரானிடமிருந்து தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் வரும் நிலையில், அமீரக அதிபரின் இந்த ‘ஸ்டிரைக்’ பதில் வளைகுடா அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.