ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், சீனாவிடமிருந்து ஈரான் சுமார் 9 லட்சம் ‘சிறப்பு ஆயுதங்களை’ தருவதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆயுதங்கள் நவீன ஏவுகணைகளோ அல்லது போர் விமானங்களோ அல்ல, மாறாக இவை ஒருவிதமான நவீன தொழில்நுட்பம் கொண்ட ‘பலூன்கள்’ என்று கூறப்படுகிறது. இந்த பலூன்கள் அமெரிக்க வான்வெளியில் நுழைந்து குழப்பத்தை விளைவிப்பதாகவும், இவற்றை சாதாரண பலூன்கள் என்று அலட்சியப்படுத்த முடியாமல் அமெரிக்க வான்படை திணறி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“>

இந்த ‘பலூன்’ தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்கா பயன்படுத்தும் வழிமுறைகள் தான் தற்போது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஒரு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

மேலும் மிகக் குறைந்த விலையுள்ள பலூன்களை அழிப்பதற்கு, இவ்வளவு அதிக பொருட்செலவில் ஏவுகணைகளை ஏவுவது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், ராணுவ வலிமைக்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது. ஈரானின் இந்த நூதனமான ‘குறைந்த விலை-அதிக பாதிப்பு’ தந்திரம், நவீன போர்க்களத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையும் கூட நிலைகுலையச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.