பெங்களூருவில் நள்ளிரவில் ரேபிடோ ஆட்டோவில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், அந்த ஆட்டோவின் உள்ளே ஓட்டுநர் எழுதியிருந்த உருக்கமான வரிகளால் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
@littlebengalurustories என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆட்டோவின் உட்புறத்தில், “நானும் ஒரு தந்தை மற்றும் ஒரு சகோதரரும்கூட; உங்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம், வசதியாக அமருங்கள்” என்று கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அந்தப் பெண்ணுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளன.
<a href=”http://
View this post on Instagram
“>
நள்ளிரவு 12 மணியளவில் இத்தகையதொரு பாதுகாப்பான சூழலை உறுதி செய்த ஆட்டோ ஓட்டுநரின் கண்ணியமான செயலைப் பாராட்டி வரும் பயனர்கள், இது போன்ற சிறிய மாற்றங்களே பெண்களின் இரவு நேரப் பயணத்தை அச்சமின்றி மாற்றும் என்றும், பெங்களூரு பாதுகாப்பான நகரம் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
