தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது 2026 தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை சுற்றுப்பயணம் வாயிலாக மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் 50 வருட அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ஈரோட்டில் நடிகர் விஜய் டிசம்பர் 18ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கான முழு ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் செய்துள்ளார். இந்த நிலையில் செங்கோட்டையன் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதால் தற்போது அவருடைய வழிகாட்டுதலின் படி நடிகர் விஜய் செயல்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்தும் செங்கோட்டையன் அறிவுரைப்படி விஜய் செயல்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக விஜயை மாற்றுவேன் என செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் சுற்றுப்பயணம் என அனைத்து விதமான பொறுப்புகளையும் செங்கோட்டையன் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் விஜய் செயல்படுவதாக தற்போது புதிய தகவல் வெளிவந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.