முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்கள், கட்சிக் கூட்டங்களுக்கு போவதற்கு சிறு தயக்கம் உண்டு. இது திராவிட முன்னேற்றக் கழக மேடைதான் தைரியமாக கூறுவேன், நான் பெரியாருடைய தொண்டன். நான் பெரியார் திடலுக்கு மட்டும் செல்வேன். பெரியார் கருத்துக்கள் பேசும் இடத்திற்கு மட்டும் செல்வேன். தமிழின போராட்டம் உச்சத்தில் இருக்கும்போது தமிழின விடுதலைப் போராட்டத்திற்காக சென்றேன். ஆனால் இன்றைக்கு என்ன ஆகி விட்டது என்றால், தயங்காமல் திராவிட முன்னேற்றக் கழக மேடை தான் என்று கூப்பிட்டாலே வருகிற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு.
இப்போ இந்த மத புயலை அடித்து துரத்திட்டோம். இதை தடுப்பதற்கான ஒரே கேடயம் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கேடயம் தான். இது விளையாட்டு அல்ல, எவ்வளவு மாற்று கருத்துகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திமுக இன்னும் கேடயம் வைத்து தான் மனிதர்களை பிளவுபடுத்தும் மத புயலை தமிழ்நாட்டிற்கள் வராமல் தடுக்க முடியும். இந்த கேடயத்தை தூக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது இந்த கேடயத்தை எல்லாரும் தூக்கி தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
