தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் தி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான் நம் சொந்தங்கள் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் வேறு வேறு என்று ஆகிவிடுமா நாம் அனைவருமே ஒன்றுதான்.
34புதுச்சேரி சட்டமன்றத்தில் 16 முறை மாநில அந்தஸ்து வழங்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. போதிய நிதி வழங்காததால் கடன் வாங்கும் சூழல் நிலவுகிறது. கண்டிப்பாக புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கும் நான் புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்ந்து குரல் கொடுப்பேன். தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தவர் எம்ஜிஆர். நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என்று அலர்ட் செய்தது புதுச்சேரி தான் என்று கூறினார்.
