கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அருண்குமார் மற்றும் ஸ்ரீ கவுதமன் ஆகிய இருவரும், நண்பர்களுடன் கேரளா சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்த பயணத்தின் போது, கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளிக்கச் சென்ற அவர்கள், திடீரென ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கினர். எச்சரிக்கையின்றி ஏற்பட்ட இந்த விபத்தில், இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த சில நொடிகளில் அவர்கள் நீரில் மூழ்கியதாகவும், அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் பயனளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் சுழலில் சிக்கிய கோவை கல்லூரி மாணவர்கள்#Kerala #Coimbatore #CollegeStudents #Death #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/e3wnPfFPTz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 9, 2025
“>
இந்த இருவரும் நீரில் மூழ்கும் காட்சி வீடியோவாக பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சோகமான காட்சி, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காவல்துறையும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டுள்ளனர்.
