நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன், சென்னை இல்லத்தில் நேற்று திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மயங்கிய நிலையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் குழுவினரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
