சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், விமானத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சண்டையிடுவது பதிவாகியுள்ளது. இந்தச் சண்டையால் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. @AyeshaKhan என்ற X கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஆணும் பெண்ணும் உரத்த குரலில் வாக்குவாதம் செய்வதையும், ஆண் பெண்ணின் கழுத்தைப் பிடிப்பதையும், பெண் ஆணின் கன்னத்தில் அறைவதையும் பார்க்கலாம். இந்தச் சண்டைக்கு சரியான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

விமானப் பணிப்பெண்கள் இருவரையும் தடுக்க முயன்றபோதும், அவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து சண்டையிட்டனர். இந்தச் சம்பவத்தால் விமானத்தில் குழப்பமான சூழல் உருவானது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். பலர் இந்தச் சண்டையைக் கண்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிலர், “வீட்டில் சண்டையிடுவது போலவே விமானத்திலும் சண்டை செய்கிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.