இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அது அவர்களுக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது.

தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் செய்கிறார். வாகனங்கள் அவரை சுற்றி வேகமாக செல்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.