உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஒரு தாபா உணவகம் அருகே தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கணவரை, அவரது மனைவியும் உறவினர்களும் சேர்ந்து திடீரெனத் தாக்கினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில், ஒரு பெண் தனது உறவினர்களுடன் வந்து காரைச் சூழ்ந்து கொள்வதும், அந்த நபர் தப்பிக்க முயலும்போது அவர்கள் கற்கள் மற்றும் தடியால் காரைத் தாக்கிச் சேதப்படுத்துவதும் தெளிவாகத் தெரிகிறது. உயிருக்கு பயந்த அந்த நபர், தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தனது காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.
<a href=”http://

“>

அவரைப் பிடிப்பதற்காக அவரது உறவினர்களும் மற்ற இரு கார்களில் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர். இந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போலத் தெரிகிறது. தற்போது பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.