மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அந்த இளைஞரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த பின்னரும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யார், எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுவெளியில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
