சமூக ஊடகங்களில் வைரல் மற்றும் லைக்ஸ்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் ஆபத்தான காரியங்கள் சில நேரங்களில் உயிருக்கே உலையாக முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் சகதி நிறைந்த கலங்கலான நீரில் குளிப்பதையும், அதை வீடியோ எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆற்றுக்குள் இறங்குகிறார்.

ஆனால், அந்தத் தண்ணீருக்கு அடியில் ஒரு முதலை அவருக்காகக் காத்திருக்கிறது என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கிய அடுத்த நொடியே, மின்னல் வேகத்தில் வந்த முதலை அவரது காலைத் தனது பலமான தாடைகளால் கவ்விப் பிடித்தது. இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அந்த நபர் வலியால் அலறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Eddie Marcel Jones (@emarceljones)

“>

மேலும் முதலை அவரை ஆழமான பகுதிக்கு இழுக்க முயன்றபோதிலும், அவர் விடாமுயற்சியுடன் போராடி எப்படியோ கரைக்கு வந்து சேர்ந்தார். கரைக்கு வந்த பின்னரும் முதலை அவரது காலை விட மறுத்தது; இறுதியில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் முதலையிடமிருந்து தப்பினார்.

இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தெளிவான விவரங்கள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.