பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பொதுமக்களையும் நோயாளிகளையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த எல்.இ.டி திரையில் திடீரென ஆபாசப் படம் ஓடத் தொடங்கியுள்ளது.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். பலர் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இந்த அநாகரீகமான காட்சியைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக இதைச் செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். புனிதமாகக் கருதப்படும் மருத்துவமனையில், நோயாளிகள் வேதனையுடன் காத்திருக்கும் இடத்தில் இத்தகைய ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.