கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள வெறி சில நேரங்களில் விபரீதமான செயல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் பிட்ச்சையும் நாசம் செய்துள்ளார்.

மேலும் சக வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்த இளைஞர் திடீரென ஒரு டிராக்டரை ஓட்டி வந்து மைதானத்தின் நடுவே இருந்த பிட்ச்சைத் தோண்டி உழுதது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விளையாட்டில் காட்ட வேண்டிய வேகத்தை, ஆத்திரத்தில் மைதானத்தை அழிப்பதில் காட்டிய அந்த இளைஞரின் செயல் தற்போது இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

“>

இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், வீடியோவில் உள்ள காட்சிகள் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கின்றன. கஷ்டப்பட்டு தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை, ஒரு தனிப்பட்ட கோபத்திற்காக டிராக்டர் கொண்டு சிதைப்பது விளையாட்டு உணர்விற்கு எதிரானது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “பேட்டிங் கிடைக்கவில்லை என்றால் அடுத்த முறை விளையாடலாம், ஆனால் பிட்ச்சையே அழிப்பது முறையல்ல” என கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.