ராபிடோ பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவர், அந்தப் பயணத்தின்போது தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அத்துமீறல்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அலுவலகம் முடிந்து தனது தங்கும் விடுதிக்குச் சென்றபோது, பைக் ஓட்டுநர் தொடர்ந்து தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் தவறுதலாகத் தொடுவதுபோலத் தெரிந்தாலும், பிறகு அது திட்டமிட்ட செயல் என்பதை உணர்ந்ததாகவும், அந்த நேரத்தில் பயம் மற்றும் அதிர்ச்சியால் தன்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பயணத்தின்போது அந்த ஓட்டுநர் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு அச்சுறுத்தியதுடன், அந்தப் பெண் தடுத்தும் கூடத் தனது செயலை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி இந்தச் சம்பவத்தைத் தனது மொபைலில் அந்தப் பெண் பதிவு செய்துள்ளார்.

“>

 

மொபைல் செயலிகள் மூலம் பைக் டாக்ஸி பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராபிடோ நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.