தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் கல்வி மற்றும் நிர்வாகக் கொள்கைகள் குறித்த அதிரடியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியல் சாசனம் ஒரு பாடமாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குத் தரமான கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பதவிகளில் சரிபாதி இடங்கள் பெண்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே தனது இலக்கு என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
