சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்பிறகு கிராமுக்கு 30 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 7315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 1000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.