இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் முழக்கம் எழுப்புதல் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளுக்காகவும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. அதனைப் போலவே அரசியல் தலைவர்கள் குழந்தைகளை கையில் தூக்கிச் சென்று பிரசாரம் செய்வது மற்றும் பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவது கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.