கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில் இருந்துள்ளார்.

ஆனால் விபத்துக்குள்ளான காரில் எம்எல்ஏ டிரைவர் சதீஷ் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர் சந்திரசேகர் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.